திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஜாக்கிரதை நீதிபதிகள்

ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.

அதுவும் எனக்கு பிடித்த சம்பவம்,
எனக்கு பிடித்ததால் உங்களுக்கும் பிடிக்கும்
என நான் சொல்லவில்லை. மாறாக
அது சுமந்து வரும் உயிர் நிச்சயம்
உங்களுக்கும் பிடிக்கும்.


கதை இதுதான் ...

ஒருமுறை சாக்ரட்டீஸ்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது
ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி
ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,

" என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால்
அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே
நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான்
அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? "
என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால்
யாராவது பயனடைவார்களா......???"
என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை
தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்."


நம்மில் பெரும்பாலோர்கள் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக நம்மை தவிர
பிறரை பற்றி பேசிக்கொண்டு தான்
இருக்கிறோம்.

அப்படி நாம் பேசும் விஷயங்கள் பெரும்பாலும்
நமது மேன்மையை நேரடியாகவும் மறைமுகமாகவும்
நிறுவிக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கிறது.

என்றாவது நாம் பிறரை பற்றி பேசியது போலவே
நிகழ்வுகள் நமது வாழ்விலும் வந்துவிட்டால்
துடிதுடித்துப் போகிறோம். எவைகளை எல்லாம்
நாம் நமது யோக்கியதையாக பறைசாற்றி

பெருமைகொண்டு பூரித்துப்போய் புளங்காகிதம்
அடைந்து இருந்தோமோ அவைகள் எல்லாம்
நம்மை விட்டு நகர்ந்து பிறரை பற்றி நாம்
பேசியவைகள் போலவே நம்மை பற்றி பிறர்
பேச விழையும் போது கண் விழித்துப் பார்க்கிறோம்.


ஆக

எங்கே தவறினோம்
எங்கே திசைமாறினோம்.
என்ன நடந்தது என
ஆழ்ந்து யோசிக்க தொடங்குகிறோம்.

உள்ளபடியே இப்படியான நிலை
நம்முடைய கடந்த கால தவறுகளையும்
நிகழ்கால படிப்பினைகளையும் எதிர்கால
பணிகளையும் பொறுப்புகளையும்
கற்றுதருவதாகவே உணர்கிறேன்.


இதை நான் பிறருக்கு எழுதவில்லை.
என்னை உட்படுத்தி என் வலிகளை உரசிப்பார்த்து
உணர்ந்து கொண்டு தான் சொல்கிறேன்.

எனவே

நீதிமன்றங்களை மூடி விடுங்கள்.
நீதிபதிகளுக்கு ஒய்வு கொடுங்கள்.

எல்லாவற்றையும் பல கோணங்களில் அணுகி
அலசிப்பார்க்க முயற்சியுங்கள்.

தீர்ப்புகள் தண்டனைகள் வேண்டாம்.
அனுசரணை அன்பு கொள்ளுங்கள்.


நீதிக்கு உலகம் இன்றும் என்றும் போற்றும்
கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்.

"தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில்
இரத்தம் வடிய வடிய ஒருவன் நீதி கேட்டு வந்தாலும்
அவனது எதிரி வரும் வரை நீதி வழங்கி விடாதே

ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை
இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் இருக்கலாம்"


நன்றி


அன்புடன்
அ மு அன்வர் சதாத்









புதன், 1 அக்டோபர், 2014

கல்வியின் நோக்கம் - பிளேட்டோ


கல்வியின் நோக்கம் என்ன வென்பதை பற்றி
நாம் நிச்சமற்றவராக இருக்கக்கூடாது.

மற்றொருவன் அடைந்திருக்கும் பயிற்சியைப்
பாராட்டவோ அல்லது குறைகூறவோ செய்கிறபோது,

நாம் நம்மை படித்தவர்களென்று கருதிக்கொள்கிறோம்.


மற்றவனை ஏதோ ஒரு விஷயத்தில்,

உதாரணமாக வியாபார விஷயத்தில் அல்லது
கப்பல் தொழிலில் படிப்பில்லாதவன்,

அதாவது அந்தத்துறையில் பயிற்சி
இல்லாதவனென்று சொல்கிறோம்.

நாம் கூறுகிற கல்வியின் நோக்கம் இதுவன்று.

சிறு வயதிலிருந்து ஒருவனை
ஒழுக்கத்தில் பயிலுவிப்பது எதுவோ,

எது அவனை ஒழுங்குள்ள பிரஜையாக
இருக்கவேண்டுமென்று ஆவலுடையவனாகச் செய்கிறதோ,

எது அந்தப்பிரஜைக்கு நீதி முறையாக ஆள்வதற்கும்
ஆளப்படுவதற்க்கும் தெரியப் பண்ணுகிறதோ,
அதைத்தான் கல்வி யென்று நாம் சொல்கிறோம்.


மற்றபடி பணம் சம்பாதிப்பதையோ,
தேகபலத்தை விருத்தி செய்து கொள்வதையோ,

வேறு துறைகளில் பயிற்சி பெறுவதையோ
நோக்கமாகக் கொண்ட எந்தக் கல்வி முறையும்

சிந்தனையற்ற யந்திரந்தான்;
மன விரிவற்றதுதான்.

இதனைக் கல்வியென்று
பெயரிட்டே அழைக்கக் கூடாது.

                          - பிளேட்டோ

 :- இன்று நான் படித்ததில் எனக்கு பிடித்தது ... 

வியாழன், 19 செப்டம்பர், 2013

சமூக அமைதி

மக்களை 

மக்களுக்கு
எதிராக

திருப்பும்
மக்களை

மக்களாகிய
நாம்

எப்படி
கையாள்கிறோம்

என்பதின்
மூலம்

கிடைப்பதே

சமூக அமைதி...

சனி, 14 செப்டம்பர், 2013

அறிவதின் ஆரம்பம்

கேட்பது,

பார்ப்பது,

அதன் மூலம் வரும் எல்லா
உணர்வுகளையும் உள்வாங்குவது,

அசைபோடுவது,

பொறுமைக்காப்பது,

பொறுமைக்காப்பது,

பொறுமைக்காப்பது,

நீண்ட பொறுமை காப்பது,

அவசியப்பட்டால் உரியவை செய்வது....

இன்னும் வாயை
திறக்கவே சொல்லவில்லை நான்.....

செவ்வாய், 16 ஜூலை, 2013

நான்




ஆயுள் எனும்
வரையறுக்கப்பட்ட

முடிவறியா
நீண்ட பயணத்தில்

உடல்
எனும் வாகனம்

அதற்கு உறவு எனும்
எரிபொருள்

தீர்ந்துவிடுமோ எனும்
அச்சத்தினூடே

தொடர் பயணியாய்
பயணிக்கும்

பெயரிடப்பட்ட
உருதெரியாத

நான்.....

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

வெள்ளி, 21 ஜூன், 2013

உயிரை மறந்து உடலை தேடும் உள்ளம்



மனித உடல் என்பதன் விரிவாக்கம் செல்களால் ஆனது. கோடிக்கணக்கான செல்களின் ஒன்றுகூட்டாலே உருவம் ஆகும். கண் எனும் ஒரு உருவத்தின் உள்ளே லட்சக்கணக்கான செல்கள் இருக்கின்றன. அதேபோல மூளை, மூக்கு, காது, நாக்கு, பல், உதடு, கைகள், கால்கள், உள் உறுப்புகள் என அனைத்து உறுப்புக்களும் பல லட்சக்கணக்கான செல்களின் ஒன்றுகூட்டலே மேலே குறிப்பிட்ட உறுப்புகள். 

செல்கள் எப்படி இயங்குகிறது என்றால் அனைத்து செல்களும் தான் இயங்குவதற்கு ஒரே மாதிரியான செயலையே செய்கிறது. ஆனால் அதன் பணிகள் என்பது வெவ்வேறானது. அதேபோல செல்களின் உருவ அமைப்புகளும் வெவ்வேறான வடிவங்களை கொண்டது.

அனைத்து செல்களுக்கும் நொடிப்பொழுதில் அது இயங்க தேவையான சக்திக்கு ரத்தத்தை கொண்டு கொடுத்துக்கொண்டே இருக்கிறது செல்களின் மற்றொரு உறுப்பான ரத்த நாளங்கள். அந்த நாளங்களின் வழியே ரத்தங்களை கொண்டு செல்ல அழுத்தத்தை கொடுக்கிறது மற்றொரு செல்களின் உருவமான இதயம். இதயத்தை இயக்க தேவையான காற்றை பெற மூக்கும் மூச்சிக்குழாயும் உதவுகின்றன.

அதன் அனைத்து செயல்களையும் சரியே நிர்வகிக்கிறது செல்களின் மற்றொரு உருவமான மூளை. மூளையின் பணிகளை நிர்வகிப்பதற்கு ஒரு உறுப்பு இருக்கிறது. ஆனால் அதை பார்க்க முடியாது. அதுதான் உயிர்.

ஆக உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கும் தேவையான அனைத்தையும் நிர்வகிப்பத்தின் நிர்வாகியான மூளையின் பிரதான நிர்வாகி உயிர் என்பதுவே நான் உணரும் உண்மை.

காரணம் உயிர் இல்லாமல் வெறும் காற்றழுத்தத்தை செயற்கையாய் ஏற்படுத்தி அதன் மூலம் இதயத்தை இயக்கி அதன் மூலம் செல்களை இயக்கி அதன் மூலம் மனிதனை செயல்பட வைக்கமுடியுமா என்றால் முடியாது என்பதே உண்மை.

சந்தேகம் வரலாம், பேஸ் மேக்கர் கருவி கொண்டு உயிர்வாழ்கிறார்களே என்று. ஆம் வாழலாம் பல்வேறு மருந்துக்களை உட்கொண்டு, தொடர் மருத்துவரின் கண்காணிப்பின் கீழ், பலஹீனமான இயக்கத்தை கொண்டு, பயத்துடன் நிம்மதி இல்லாமல், மூளை சாகும் வரை வாழலாம். அந்த வாழ்க்கையில் நெருக்கடிகளும் மன உளைச்சல்களும் நிறைந்திருக்கும் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை.

                            

ஆக உயிர் இல்லாமல் இயங்கும் உடன் பரிபூரண சுகத்தை பெற்று வாழமுடியாது. இன்னும் சொன்னால் வாழவே முடியாது என்பதே உண்மை.

மனிதனின் இயக்கத்தின் மூலவிஷயத்தை உள்வாங்கிய நாம். நமது வாழ்வியல் இயக்கத்திற்கான செயல்முறைகளை குறித்தும் அறிந்துகொள்வோம். எப்படி செல்களின் ஒன்றுகூட்டல் என்பது உறுப்போ மற்றும் உறுப்புகளின் ஒன்றுகூட்டல் உடலோ அதேபோலவே வாழ்வியல் முறையையும் ஆய்ந்துநோக்குங்கள்.

வாழ்வியலில் எவைகள் செல்கள், எவைகள் உறுப்புகள், எவை உடல், எவை உயிர் என பார்ப்போமா.....

வாழ்வியலில் செல்கள் சுன்னத் ஆகும், உறுப்புகள் கடமைகள் ஆகும், மூளை திருக்குர்ஆன் ஆகும், உயிர் இஸ்லாமாகும். சுன்னத் எனும் செல்களை இயக்க ரத்தத்தை போல மனிதனின் நற்செயல்களே ஆகும். நற்செயல்களின் சக்தியாய் சுன்னத் எனும் செல் இயங்குகிறது. சுன்னத் எனும் செல்களால் கடமை எனும் உறுப்புகள் இயங்குகின்றன. கடமை எனும் உறுப்புக்களை மூளையான இறைவேதம் திருக்குர்ஆன் இயக்குகிறது. அவைகள் அனைத்தையும் இஸ்லாம் எனும் உயிர் இயக்குகிறது நிர்வகிக்கிறது.

                                           

எப்படி சில செல்களை மட்டும் வைத்துகொண்டு மனிதனால் இயங்கவோ வாழவோ முடியாதோ, அல்லது சில உறுப்புகளை மட்டும் கொண்டு முழு மனிதனாக வாழ முடியாதோ, அல்லது அனைத்து உறுப்புக்களை இயக்கும் மூளை இல்லாமல் வாழவோ இயங்கவோ முடியாதோ, அல்லது மூளையை நிர்வகிக்கும் உயிர் இல்லாமல் எதுவும் இல்லையோ, அதேபோல வாழ்வியலில் முறையான ஆரோக்கியமான முழுமையான சுன்னத்தும், முறையான ஆரோக்கியமான முழுமையான கடமைகளும், முறையான ஆரோக்கியமான மூளையான இறைவேதமும், அதேபோல முறையான ஆரோக்கியமான முழுமையான உயிரான இஸ்லாமும் நமது சிந்தனையில், செயலில் வரவேண்டும்.

சில உறுப்புக்களை மட்டும் கொள்வேன் அல்லது சில செல்களை மட்டும் கொள்வேன் அல்லது சில பகுதி மூளையை மட்டும் பயன்படுத்துவேன். எனக்கு உயிர் தேவையில்லை. நான் செயற்கை சுவாசம் பொருத்தி கொள்வேன் எனும் போக்கு, மேலே நாம் பார்த்தது போல குறை உள்ள செல்களாய், குறை உள்ள உறுப்புக்களாய், குறை உள்ள மூளையாய், உயிர் இல்லாத பல்வேறு ஆபத்துக்களை கொண்ட வாழ்க்கை முறைக்கு செல்கிறேன் என்பதாகும், முழுமையான இஸ்லாத்தை பின்பற்றாத வாழ்வியல் முறை.

                                 

இறைவன் கூட வாழ்வியலை அனுபவிக்கும் நம்மை பார்த்து சொல்கிறான் ‘’நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’’ (அல்குர்ஆன் 2:208).

ஆக உடலை தந்து அதை வாழ்வியல் முறை மூலம் அனுபவிக்க அனுமதித்துள்ள அல்லாஹ்வின் சொல்படி நாம் நம்மை உயிரை மறந்து உடலை தேடும் உள்ளமாக இல்லாமல் உயிரை போற்றி உடலை காத்து உள்ளப்பூர்வமாக வாழ்வோம்
அல்லாஹ் நம் அனைவரையும் முழுமையான இஸ்லாத்தை பின்பற்றும் மனிதர்களாக ஆக்குவானாக.......

வெள்ளி, 3 மே, 2013

பகை


நிலைக்கொரு நிலை கொள்ளும்,
அதிலே நிபுணத்துவம் கொள்ளும்

மனிதத்தின் மற்றுமொரு
"வெற்றி வாய்ப்பு இழப்பு".

                                          


நீதி,தர்மம்,சமூக அமைதி
என்பதன் நீட்சி

இனம்,மொழி,நிறம்,எல்லை,
கொள்கை,மதம் கடந்து

அனைத்துவகை
உயிரினங்களுக்கும் பொதுவானது

ஆனால்

மனிதம் தனக்கானதாக மட்டும்
கற்பனை செய்துகொள்வதால்

அதிலே தொடர் நிபுணத்துவ
வெளிப்பாடுகள் மூலம் முயற்சிப்பதால்
ஏற்ப்படும் குழப்பங்களே "பகை"


வியாழன், 21 பிப்ரவரி, 2013

நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.


ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
89:1    وَالْفَجْرِ
89:1விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2   وَلَيَالٍ عَشْرٍ
89:2பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3   وَالشَّفْعِ وَالْوَتْرِ
89:3இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4   وَاللَّيْلِ إِذَا يَسْرِ
89:4செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:5   هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ
89:5இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:6   أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
89:6உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7   إِرَمَ ذَاتِ الْعِمَادِ
89:7(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8   الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
89:8அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9   وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
89:9பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:10   وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
89:10மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11   الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
89:11அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:12   فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
89:12அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:13   فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
89:13எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:14   إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
89:14நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
89:15   فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
89:15ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
89:16   وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
89:16எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
89:17   كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ
89:17அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:18   وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
89:18ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:19   وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
89:19இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:20   وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
89:20இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:21   كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
89:21அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:22   وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
89:22உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
89:23   وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
89:23அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
89:24   يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
89:24“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:25   فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
89:25ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
89:26   وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
89:26மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27   يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
89:27(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28   ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
89:28நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29   فَادْخُلِي فِي عِبَادِي
89:29நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30   وَادْخُلِي جَنَّتِي
89:30மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

புதன், 13 பிப்ரவரி, 2013

விடை தெரியாமல் வீதி நோக்கி.....

உடல் நிலை சரி இல்லை என்று சமூக ஆர்வலர் மருத்துவமனை சென்று மருத்துவரை பார்க்கப்போகிறார்.அங்கே நடைபெற்ற உரையாடலும்,அதன் தொடர்ச்சியாக அவரின் பயணமும்.



சமூக ஆர்வலர் : அய்யா,நெஞ்சு வலது பக்கம் வலிக்கிதுங்க...

மருத்துவர் : அப்டியா,இந்த ஸ்கேனெல்லாம் எடுத்துவாங்க....

சமூக ஆர்வலர் : அய்யா,வலது பக்கம் தானே வலிக்கீது,இதுக்கு ஸ்கேன் தேவையில்லையே.நீங்கள் ஏன் எங்களிடம் கொள்ளை அடிக்கிறீர்கள்.



 மருத்துவர் : தம்பி,நான் இந்த படிப்பை முடிக்க
இதுவரை 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கேன்.
மருத்துவக்கல்லூரியை சீட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த சொல்லுங்க
நான் நிறுத்து விடுகிறேன்.....

சமூக ஆர்வலர் உடனே மருத்துவ கல்லூரி செல்கிறார் அங்கு..



சமூக ஆர்வலர் : அய்யா,மருத்துவப்படிப்பு படிப்பதற்கு
சீட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்.
இல்லையேல் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

கல்லூரி நிர்வாகம் : தம்பி,நாங்க மருத்துவக்கல்லூரி நடத்த ஒப்புதல் வாங்க கோடிக்கணக்கில் பணம் தந்திருக்கோம்.அமைச்சரை நிறுத்த சொலுங்கள்.
நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் நேரே அமைச்சரை பார்க்கிறார்.


சமூக ஆர்வலர் : அய்யா,மருத்துவக்கல்லூரி தொடங்க ஒப்புதலுக்கு
நீங்கள் பணம்வாங்காதீர்கள்.

அமைச்சர் : தம்பி,நான் இந்த பதவிக்கு வர
கோடிக்கணக்கில் சிலவு செய்து இருக்கிறேன்.
நீங்கள் தலைவரை நிறுத்த சொல்லுங்கள்.நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் தலைவரை பார்க்கிறார்.



சமூக ஆர்வலர் : அய்யா,அமைச்சர் பதவி தர நீங்கள் பணம் வாங்காதீர்கள்.

தலைவர் : தம்பி,நாங்கள் ஆட்சிக்கு வர கோடிக்கணக்கில்
மக்களுக்கு பணம் தந்துள்ளோம்.
அவர்களை நிறுத்த சொல்லுங்கள்.நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் தலைவரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து என்ன செய்வது என தெரியாமல் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார்.

அப்போது....



அய்யா பசிக்குது அய்யா சாப்பாடு வாங்கிக்கொடுங்கையா என
யாகசம் கேட்பவரின் குரல் கேட்கிறது.

சமூக ஆர்வலர் : !

( குறிப்பு : உலகிலேயே அதிகமான பிச்சைகாரர்கள் இருக்கும்
   நாடுகளில் முன்னைனியில் உள்ள நாடு இந்தியா )

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நான்கு காட்சிகள் அதில் பல மனிதர்கள்

காட்சி ஒன்று : 

                                                 

ஏழு ஆயிரத்து முன்னூறு
நாட்களுக்கு முன்பு
காலை சுமார் பதினொன்று மணிக்கு
நான் பார்த்த சில நிகழ்வுகளை
திரும்பி பார்கிறேன்......

கடும் போக்குவரத்து நெரிசலில்
இயலாமையிலும் தோல் கொடுத்த
பல சகோதரர்களுக்கு மத்தியில்
இரண்டு மனிதங்களின்
உணர்வுகளை
உள்வாங்கிய தருணங்களை
திரும்பி பார்கிறேன்......

புரியாமையில் தோல் கொடுக்காத
நிகழ்வின் போது சில
மனிதர்களின் வேடிக்கையையும்
திரும்பி பார்கிறேன்......

மறுபக்கம் வெளி தெரியாமல் இருந்த
சில மேன்மக்களின் கர்வத்தையும்
திரும்பி பார்கிறேன்......

அகங்காரத்தில் உதிர்த்த
சில சொல்லாடலையும்
திரும்பி பார்கிறேன்.....

மிகுதியான கவலையில் கிடந்த
உன்னதமான தாய்மையையும்
திரும்பி பார்கிறேன்......

ஆனால்.......

திரும்பி கேட்கிறேன் - அந்த நிகழ்வை அல்ல
அழகாய் இருந்த
ஒற்றுமையை ......

திரும்பி கேட்கிறேன் - அந்த அகங்காரத்தை அல்ல
இயலாமையிலும் தோல் கொடுத்த
சொந்தங்களை.....

நேராய் காண்கின்றேன் -
எந்த நிகழ்விலும்
எந்த உணர்விலும்
எந்த காலத்திலும்
எந்த விதத்திலும்
மாறாத
அந்த உன்னதமான தாய்மையை........

நிச்சயமாக வணக்கத்திற்குரியவன்
இறைவனைத்தவிர வேறொன்றும் இல்லை....

முஹம்மது நபி சல்லல்லாஹு அலைகி வசல்லம் அவர்கள்
இறைவனின் இறுதி தூதராக இருக்கிறார்கள்
என்று சாட்சி கூறுகிறேன்........

காட்சி இரண்டு :

                                               

என் அனுமதி இல்லாமல்
என் கண்ணில் நீர்.

எங்காவது சென்று
ஏங்கி அழவேண்டும் போல இருக்கிறது.

ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்.

எந்த கொடுமதியும் இல்லாமல்
ஏற்றம் பெறவேண்டும்
என் சமூகம் என

ஏக்கத்துடன் தொலைந்து போனவன்
என்னை தேடுகிறேன்
எங்கே நான்

காட்சி மூன்று :

                                              

சக சொந்தங்களின் துணையுடன்
தன்னைத்தேடி வெற்றி கண்ட நீங்கள்

இனி சமூகத்தின் வெற்றிக்காக
மட்டுமே தேடலை தொடர்வோம்

இனி வரும் நாட்களில்
தேடல் எனும் பணி
நம்மை நோக்கி அல்ல

நம் சமூகத்தின் வெற்றி நோக்கியே......
இன்ஷா அல்லாஹ் ...

காட்சி நான்கு :

                                         

சிந்திக்கும் போதெல்லாம்
சிதைந்துவிடுகிறேன்

இறைவன் தந்திருக்கும்
மனபலம் கொண்டு

இனி சிதைந்ததை எல்லாம்
விதையாக்கி

என் இதயத்தை கீறி
விதைக்கிறேன்

விருட்சமாகி பலன் தரும்

நமக்கு மட்டுமல்ல

நம் சமூகத்திற்கும்

http://www.engenaan.blogspot.in/2011/06/blog-post.html

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

( குறிப்பு : கடந்த டிசம்பர் ஆறாம் தேதி 06-12-2012 அன்று நடைபெற்ற
இரண்டு பேருக்கு மத்தியில் நடைபெற்ற உரையாடல் )