வெள்ளி, 21 ஜூன், 2013

உயிரை மறந்து உடலை தேடும் உள்ளம்



மனித உடல் என்பதன் விரிவாக்கம் செல்களால் ஆனது. கோடிக்கணக்கான செல்களின் ஒன்றுகூட்டாலே உருவம் ஆகும். கண் எனும் ஒரு உருவத்தின் உள்ளே லட்சக்கணக்கான செல்கள் இருக்கின்றன. அதேபோல மூளை, மூக்கு, காது, நாக்கு, பல், உதடு, கைகள், கால்கள், உள் உறுப்புகள் என அனைத்து உறுப்புக்களும் பல லட்சக்கணக்கான செல்களின் ஒன்றுகூட்டலே மேலே குறிப்பிட்ட உறுப்புகள். 

செல்கள் எப்படி இயங்குகிறது என்றால் அனைத்து செல்களும் தான் இயங்குவதற்கு ஒரே மாதிரியான செயலையே செய்கிறது. ஆனால் அதன் பணிகள் என்பது வெவ்வேறானது. அதேபோல செல்களின் உருவ அமைப்புகளும் வெவ்வேறான வடிவங்களை கொண்டது.

அனைத்து செல்களுக்கும் நொடிப்பொழுதில் அது இயங்க தேவையான சக்திக்கு ரத்தத்தை கொண்டு கொடுத்துக்கொண்டே இருக்கிறது செல்களின் மற்றொரு உறுப்பான ரத்த நாளங்கள். அந்த நாளங்களின் வழியே ரத்தங்களை கொண்டு செல்ல அழுத்தத்தை கொடுக்கிறது மற்றொரு செல்களின் உருவமான இதயம். இதயத்தை இயக்க தேவையான காற்றை பெற மூக்கும் மூச்சிக்குழாயும் உதவுகின்றன.

அதன் அனைத்து செயல்களையும் சரியே நிர்வகிக்கிறது செல்களின் மற்றொரு உருவமான மூளை. மூளையின் பணிகளை நிர்வகிப்பதற்கு ஒரு உறுப்பு இருக்கிறது. ஆனால் அதை பார்க்க முடியாது. அதுதான் உயிர்.

ஆக உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கும் தேவையான அனைத்தையும் நிர்வகிப்பத்தின் நிர்வாகியான மூளையின் பிரதான நிர்வாகி உயிர் என்பதுவே நான் உணரும் உண்மை.

காரணம் உயிர் இல்லாமல் வெறும் காற்றழுத்தத்தை செயற்கையாய் ஏற்படுத்தி அதன் மூலம் இதயத்தை இயக்கி அதன் மூலம் செல்களை இயக்கி அதன் மூலம் மனிதனை செயல்பட வைக்கமுடியுமா என்றால் முடியாது என்பதே உண்மை.

சந்தேகம் வரலாம், பேஸ் மேக்கர் கருவி கொண்டு உயிர்வாழ்கிறார்களே என்று. ஆம் வாழலாம் பல்வேறு மருந்துக்களை உட்கொண்டு, தொடர் மருத்துவரின் கண்காணிப்பின் கீழ், பலஹீனமான இயக்கத்தை கொண்டு, பயத்துடன் நிம்மதி இல்லாமல், மூளை சாகும் வரை வாழலாம். அந்த வாழ்க்கையில் நெருக்கடிகளும் மன உளைச்சல்களும் நிறைந்திருக்கும் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை.

                            

ஆக உயிர் இல்லாமல் இயங்கும் உடன் பரிபூரண சுகத்தை பெற்று வாழமுடியாது. இன்னும் சொன்னால் வாழவே முடியாது என்பதே உண்மை.

மனிதனின் இயக்கத்தின் மூலவிஷயத்தை உள்வாங்கிய நாம். நமது வாழ்வியல் இயக்கத்திற்கான செயல்முறைகளை குறித்தும் அறிந்துகொள்வோம். எப்படி செல்களின் ஒன்றுகூட்டல் என்பது உறுப்போ மற்றும் உறுப்புகளின் ஒன்றுகூட்டல் உடலோ அதேபோலவே வாழ்வியல் முறையையும் ஆய்ந்துநோக்குங்கள்.

வாழ்வியலில் எவைகள் செல்கள், எவைகள் உறுப்புகள், எவை உடல், எவை உயிர் என பார்ப்போமா.....

வாழ்வியலில் செல்கள் சுன்னத் ஆகும், உறுப்புகள் கடமைகள் ஆகும், மூளை திருக்குர்ஆன் ஆகும், உயிர் இஸ்லாமாகும். சுன்னத் எனும் செல்களை இயக்க ரத்தத்தை போல மனிதனின் நற்செயல்களே ஆகும். நற்செயல்களின் சக்தியாய் சுன்னத் எனும் செல் இயங்குகிறது. சுன்னத் எனும் செல்களால் கடமை எனும் உறுப்புகள் இயங்குகின்றன. கடமை எனும் உறுப்புக்களை மூளையான இறைவேதம் திருக்குர்ஆன் இயக்குகிறது. அவைகள் அனைத்தையும் இஸ்லாம் எனும் உயிர் இயக்குகிறது நிர்வகிக்கிறது.

                                           

எப்படி சில செல்களை மட்டும் வைத்துகொண்டு மனிதனால் இயங்கவோ வாழவோ முடியாதோ, அல்லது சில உறுப்புகளை மட்டும் கொண்டு முழு மனிதனாக வாழ முடியாதோ, அல்லது அனைத்து உறுப்புக்களை இயக்கும் மூளை இல்லாமல் வாழவோ இயங்கவோ முடியாதோ, அல்லது மூளையை நிர்வகிக்கும் உயிர் இல்லாமல் எதுவும் இல்லையோ, அதேபோல வாழ்வியலில் முறையான ஆரோக்கியமான முழுமையான சுன்னத்தும், முறையான ஆரோக்கியமான முழுமையான கடமைகளும், முறையான ஆரோக்கியமான மூளையான இறைவேதமும், அதேபோல முறையான ஆரோக்கியமான முழுமையான உயிரான இஸ்லாமும் நமது சிந்தனையில், செயலில் வரவேண்டும்.

சில உறுப்புக்களை மட்டும் கொள்வேன் அல்லது சில செல்களை மட்டும் கொள்வேன் அல்லது சில பகுதி மூளையை மட்டும் பயன்படுத்துவேன். எனக்கு உயிர் தேவையில்லை. நான் செயற்கை சுவாசம் பொருத்தி கொள்வேன் எனும் போக்கு, மேலே நாம் பார்த்தது போல குறை உள்ள செல்களாய், குறை உள்ள உறுப்புக்களாய், குறை உள்ள மூளையாய், உயிர் இல்லாத பல்வேறு ஆபத்துக்களை கொண்ட வாழ்க்கை முறைக்கு செல்கிறேன் என்பதாகும், முழுமையான இஸ்லாத்தை பின்பற்றாத வாழ்வியல் முறை.

                                 

இறைவன் கூட வாழ்வியலை அனுபவிக்கும் நம்மை பார்த்து சொல்கிறான் ‘’நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’’ (அல்குர்ஆன் 2:208).

ஆக உடலை தந்து அதை வாழ்வியல் முறை மூலம் அனுபவிக்க அனுமதித்துள்ள அல்லாஹ்வின் சொல்படி நாம் நம்மை உயிரை மறந்து உடலை தேடும் உள்ளமாக இல்லாமல் உயிரை போற்றி உடலை காத்து உள்ளப்பூர்வமாக வாழ்வோம்
அல்லாஹ் நம் அனைவரையும் முழுமையான இஸ்லாத்தை பின்பற்றும் மனிதர்களாக ஆக்குவானாக.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக