புதன், 13 பிப்ரவரி, 2013

விடை தெரியாமல் வீதி நோக்கி.....

உடல் நிலை சரி இல்லை என்று சமூக ஆர்வலர் மருத்துவமனை சென்று மருத்துவரை பார்க்கப்போகிறார்.அங்கே நடைபெற்ற உரையாடலும்,அதன் தொடர்ச்சியாக அவரின் பயணமும்.



சமூக ஆர்வலர் : அய்யா,நெஞ்சு வலது பக்கம் வலிக்கிதுங்க...

மருத்துவர் : அப்டியா,இந்த ஸ்கேனெல்லாம் எடுத்துவாங்க....

சமூக ஆர்வலர் : அய்யா,வலது பக்கம் தானே வலிக்கீது,இதுக்கு ஸ்கேன் தேவையில்லையே.நீங்கள் ஏன் எங்களிடம் கொள்ளை அடிக்கிறீர்கள்.



 மருத்துவர் : தம்பி,நான் இந்த படிப்பை முடிக்க
இதுவரை 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கேன்.
மருத்துவக்கல்லூரியை சீட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த சொல்லுங்க
நான் நிறுத்து விடுகிறேன்.....

சமூக ஆர்வலர் உடனே மருத்துவ கல்லூரி செல்கிறார் அங்கு..



சமூக ஆர்வலர் : அய்யா,மருத்துவப்படிப்பு படிப்பதற்கு
சீட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்.
இல்லையேல் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

கல்லூரி நிர்வாகம் : தம்பி,நாங்க மருத்துவக்கல்லூரி நடத்த ஒப்புதல் வாங்க கோடிக்கணக்கில் பணம் தந்திருக்கோம்.அமைச்சரை நிறுத்த சொலுங்கள்.
நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் நேரே அமைச்சரை பார்க்கிறார்.


சமூக ஆர்வலர் : அய்யா,மருத்துவக்கல்லூரி தொடங்க ஒப்புதலுக்கு
நீங்கள் பணம்வாங்காதீர்கள்.

அமைச்சர் : தம்பி,நான் இந்த பதவிக்கு வர
கோடிக்கணக்கில் சிலவு செய்து இருக்கிறேன்.
நீங்கள் தலைவரை நிறுத்த சொல்லுங்கள்.நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் தலைவரை பார்க்கிறார்.



சமூக ஆர்வலர் : அய்யா,அமைச்சர் பதவி தர நீங்கள் பணம் வாங்காதீர்கள்.

தலைவர் : தம்பி,நாங்கள் ஆட்சிக்கு வர கோடிக்கணக்கில்
மக்களுக்கு பணம் தந்துள்ளோம்.
அவர்களை நிறுத்த சொல்லுங்கள்.நான் நிறுத்தி விடுகிறேன்.

சமூக ஆர்வலர் தலைவரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து என்ன செய்வது என தெரியாமல் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார்.

அப்போது....



அய்யா பசிக்குது அய்யா சாப்பாடு வாங்கிக்கொடுங்கையா என
யாகசம் கேட்பவரின் குரல் கேட்கிறது.

சமூக ஆர்வலர் : !

( குறிப்பு : உலகிலேயே அதிகமான பிச்சைகாரர்கள் இருக்கும்
   நாடுகளில் முன்னைனியில் உள்ள நாடு இந்தியா )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக