புதன், 23 ஜனவரி, 2013

பாலம் பழுது மாற்று பாதையில் செல்லவும்

ஒருதலைவர் தனது தொண்டர்களுடன்

ஊர்வலம் போனார்.பெரிய ஊர்வலம் அது.


தலைவர் கம்பீரமாக முன்னே நடக்க

தொண்டர்கள் தலைவரை பின்தொடர்ந்து

பின்னே வருகிறார்கள்.


ஊர்வலத்தை காண சாலையின் இருபுறமும் 

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள்.


ஊர்வலம் கடைவீதியை கடந்தது,

பிரதான சாலையை கடந்தது,

இறுதியாக மாநாடு நடக்கும் இடத்திற்கு முன்

ஒரு பெரிய பாலத்தை கக்கு தொடங்கியது.


அங்கேயும் பாலத்தின் இருபுறமும்

மக்கள் வெள்ளம்


தலைவர் கம்பீரமாக நடக்கிறார்.

தொண்டர்கள் தலைவரை பின்தொடர்ந்து

பின்னே நடக்கிறார்.




அப்போது சாலை ஓரத்தில் இருந்த சிலர்

தலைவர் கடக்கும் போது


தலைவரே....

 நீங்கள் கடக்கப்போகும் பாலம்

மறுபக்கம் உடைந்துவிட்டது,

எனவே பாலத்தை கடக்க முடியாது என்கிறார்கள்.


தலைவர் சற்று கலக்கமாகி

பினால் வரும் தொண்டர்களை பார்க்கிறார்.

தொண்டர்கள் மிக கம்பீரமாக வீறு நடைபோட்டு

கோஷங்கள் முழங்க வருகிறார்கள்.


தலைவர் முடிவெடுக்கிறார்.

எவ்வளவு தொண்டர்கள் நம்மை பின் தொடர்ந்து

கம்பீரமாக வருகிறார்கள்.

அவர்களுக்கு தெரியாதா பாலத்தின் பழுது.

பழுதிருந்தால் நம்மை தடுத்திருப்பார்களே என

பாலத்தை கடப்பதே சரி என தீர்க்கமான ?

முடிவெடுக்கிறார்.சாலையோர மக்களை

கடந்துவிடுகிறார்.


தற்போது தொண்டர்கள்

அந்த சாலையோர மக்களை கடக்கிறார்கள்.

அதே போலவே சாலையோர மக்கள்

தொண்டர்களிடமும் சொல்கிறார்கள்.


தொண்டர்களே..

நீங்கள் கடக்கப்போகும் பாலம்

மறுபக்கம் உடைந்துவிட்டது,

எனவே பாலத்தை கடக்க முடியாது.


தற்போது தொண்டர்கள் தலைவரை பார்க்கிறார்கள்.

தலைவர் வீறு நடை போட்டு கம்பீரமாக நடக்கிறார்.

ச்சே எப்படி போறாரு பாரு நம்ம தலைவர்.

பாலம் பழுதிருந்தால் தலைவர் நம்மிடம்

நிச்சயம் சொல்லி இருப்பார்.

அப்படி பழுதில்லாததால் தான்

தலைவர் கம்பீரமாக முன்னே செல்கிறார்

என அவர்களும் தனது தலைவரை பின்தொடர்ந்து

சாலையோர மக்களை தாண்டி,

பாலத்தை கடக்கதொடங்கிவிட்டார்கள்.


ஆனால் அங்கே ஒரு அறிவிப்பு பலகை

கண்ணில் தென்படுகிறது.


''பாலம் பழுது மாற்று பாதையில் செல்லவும்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக