செவ்வாய், 25 டிசம்பர், 2012

இஸ்லாத்தில் பணம்


ஒருமுறை மதினா நகரில் மஸ்ஜித் நபவியில் நபிகள் நாயகமும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்தனர்.அபோது ஒரு பெரும் சப்தம் கேட்டது, போர் தொடுக்க படைவருவது போல குதிரைகள் ஒட்டகங்கள் சப்தம் கேட்டது.

                                        

நபிகள் நாயகம் (ஸல்) : நண்பரே என்ன சப்தம் என பார்த்து வாரும்...

தோழர் : (பார்த்து வந்து) நபிகளாரே,அது அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் அவர்களின் வியாபார பட்டாளம்.ஏராளமான ஒட்டகம்,ஆடுகள்,குதிரைகள்,
மதினா நகரே புழுதியால் இருட்டாகி விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) : நண்பரே அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் இடம் போய் சொல்லும்.நாங்களெல்லாம் சுவர்கத்தில் முதலில் நுழைந்து விடுவோம்.நீங்கள் கடைசியில் வருவீர்கள் என.

தோழர் : அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் இடம் சென்று
நபிகள் கூறினார்கள்.நாங்களெல்லாம் சுவர்க்கத்தில் முதலில் சென்றுவிடுவோம்.நீங்கள் கடைசியில் வருவீர்களாம்.

அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் கேட்டதும் வேகமாக
பதறிய நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நபிகளாரே....நண்பர் சொன்னது என்ன ?

நபிகள் நாயகம் (ஸல்) : ஆமாம் நாங்களெல்லாம் முதலில் சுவர்க்கம் சென்றுவிடுவோம்.ஏனெனில் எங்களிடம் இறைவனிடம் கணக்கு காட்ட வசதிகள்,வளங்கள் ஒன்றும் இல்லை.நீங்கள் உங்களின் இந்த அனைத்து செல்வத்திர்க்குமான கணக்கை காட்டி அதில் இறைவன் திருப்தி அடைந்ததும் தான் நீங்கள் சுவர்க்கம் வரமுடியும்.

அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் : (திகைத்து போய் ஒரு கணம் யோசித்து) நபிகளாரே...இதை அனைத்தையும் கருவூலத்தில் செலுத்தி விட்டேன்(பைத்துல்மால்) இப்போ சொல்லுங்கள் யாரசூலே..நானும் உங்களோடு சுவர்க்கம் வந்துவிடுவேனா?

நபிகள் நாயகம் (ஸல்) : ஆமாம் எங்களோடு வந்துவிடுவீர் தோழரே.....

குறிப்பு : அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்து நபிகளாருக்கு பின் வெளியேறி மதினா வந்து தஞ்சம் புகுந்தவர்(முஹாஜிர்).
நபிகளார் மற்றும் தோழர்கள் மதினா வந்ததும் மதினத்து தோழர்கள் மக்காவில் இருந்து வந்தவர்களை தனது வசதியில், வளத்தில் பங்குதந்து சகோதரர்களாக்கி கொண்டனர்.ஆனால் அப்துர்ரஹ்மான் இப்ன் அவப் (ரலி) அவர்கள் மட்டும் தனது மதீனத்து சகோதரரிடம் வசதியை, வளத்தை கேட்கவில்லை.மாறாக கடைவீதியை காட்டும்படி கூறி வியாபாரம் செய்ய தொடங்கினார்கள்.அதாவது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினார்கள்.

3 கருத்துகள்:

  1. மாஷா அல்லாஹ் பாய்... உங்களுக்கு ஒரு வலைப்பூவே இருக்கிறது என்பது இப்பத்தான் தெரியும்.... இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

    அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் அவ்வளவு சாலிட்.... மாஷா அல்லாஹ்.. :)

    பதிலளிநீக்கு
  2. //நாங்களெல்லாம் சுவர்க்கத்தில் முதலில் சென்றுவிடுவோம்.நீங்கள் கடைசியில் வருவீர்களாம்.// இந்த காலத்தில் யாரிடமாவது சொன்னால், எப்படியோ கடைசியாகவாவது வந்துடுவோம்ல... அது போதும்னு சொல்வாங்க...ஹ்..-ம்... சகாபாக்கள் சகாபாக்கள் தான்

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்....
    நேற்று எனது பாஸ் இதே ஹதீஸை எங்களுக்கு சொன்னார். இதுவரை கேள்விப்படாத ஹதீஸாக இருக்கிறதே என்று சந்தேகத்தோடு இருந்தேன். மாஸா அல்லாஹ்... உங்கள் மூலம் அல்லாஹ் எனக்கு தெளிவாக்கிவிட்டான். ஜஸாக்கல்லாஹ் அண்ணே!

    பதிலளிநீக்கு