திங்கள், 24 டிசம்பர், 2012

குணப்படுத்தி விடுவார்கள்



ஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த 
வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று கேட்டார்.

சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.

"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். 
என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும்
விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக