புதன், 5 டிசம்பர், 2012

சரித்திரத்தின் பொற்காலமாய் மலர்கிறது.

''எண்ணங்களை உள்ளே விடுங்கள்.



முடியும் என்ற எண்ணங்களைத் திரும்பத் திரும்ப 
எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது.

நமது நம்பிக்கையைத் திரும்பத் திரும்ப சிந்திக்கும் போது, 
அது செயலாகப் பரிணமிக்கிறது.

திரும்பத் திரும்பச் செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது.
பல பழக்கங்கள் ஒரு மனிதன் குணநலன்களாகின்றன."

எண்ணம் - நம்பிக்கை - செயல் - பழக்கம் -மனித குணநலன்.

எண்ணம் நம்பிக்கையாய்,நம்பிக்கை செயலாய்,
செயல் பழக்கமாய்,பழக்கம் குணநலனாய் மாறுகிறது.

முடியும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன் நாளடைவில் 
சாதனைகள் நிறைந்த பெரும் மனிதனாய் மலர்கிறான்.

சாதனைகள் புரியும் மனித சமுதாயம் சரித்திரத்தின் 
பொற்காலமாய் மலர்கிறது. 

(இன்று நான் படித்ததில் எனக்கு பிடித்தது) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக