வெள்ளி, 9 நவம்பர், 2012

சிந்தனை குப்பை


சரியானவை என நீங்கள் நிச்சயமாக நம்புகின்ற தகவல்கள்,சிந்தனைகள்,அபிப்ராயங்கள்,கருத்துக்கள்,
பிறர் பற்றிய எண்ணங்கள் என்பவற்றையே இது குறிக்கிறது.

உங்களுக்குள் ஆழப்பதிந்திருக்கும் இவ்வம்சங்கள் 
அவற்றுக்கு பாற்றமான புதிய அம்சங்களை ஏற்க விடாமல் 
உங்கள் மூளைக்கு முட்டுக்கட்டை இடுகின்றன.



நிச்சயமாக இவற்றை இனங்காண்பதும்,வேண்டாதவற்றை 
விளக்குவதும் சிரமமானது.ஏனெனில் இவை நமக்குள் மறைந்திருக்கின்றன.மாற்றுக்க்கருத்துக்களை 
எதிர்கொள்ளும் போதுதான் இவை வெளியே வருகின்றன.

''உண்மை'' என்பதனான வரைவிலக்கணம் குறித்து 
நமது சிந்தனையில் புரட்சிக்கரமான மாற்றமொன்றைக் 
கொண்டு வருவதநூடாகவே இத்தகைய குப்பைகளை 
இனங்காணவும் அகற்றவும் முடியும்.

மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞரான இமாம் ஷாபி(ரஹ்) 
தனது நிலைப்பாடுகள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

''எனது அபிப்ராயம் சரியானது,சிலவேளை, அது தவறாகவும் இருக்கலாம்.பிறரது அபிப்பிராயம் தவறானது. 
சிலவேளை, அது சரியாகவும் இருக்கலாம்.''

அல்லாஹ்வைத் தவிர இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை.
அல்லாஹ் கூறியிருக்கும் உண்மைகளைத் தவிர வேறெதுவும் 
நிரந்தரமான விஞ்ஞான உண்மையுமில்லை.

எனவே, அறிவு விடயத்தில் உங்கள் சிந்தனையை 
எப்போதும் திறந்து வையுங்கள். அந்த அறிவு விஞ்ஞான உண்மை 
என்ற பெயரில் நீங்கள் பெற்றிருக்கும் அறிவாகவும் இருக்கலாம். 
பிறர் பற்றிய அபிப்ராயங்களாகவும் இருக்கலாம்.

-இன்று நான் படித்ததில் எனக்கு பிடித்தது.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அறிவு விடயத்தில் உங்கள் சிந்தனையை
    எப்போதும் திறந்து வையுங்கள். அந்த அறிவு விஞ்ஞான உண்மை
    என்ற பெயரில் நீங்கள் பெற்றிருக்கும் அறிவாகவும் இருக்கலாம்.
    பிறர் பற்றிய அபிப்ராயங்களாகவும் இருக்கலாம்.
    அறிவுபூர்மான கருத்து. ஜஸாக்கல்லாஹ்....

    பதிலளிநீக்கு