வெள்ளி, 19 அக்டோபர், 2012

அவசியம் கருத்திடாதீர்கள். கட்டாயம் விருப்பமும் இடாதீர்கள்.

அவசியம் கருத்திடாதீர்கள்.
கட்டாயம் விருப்பமும் இடாதீர்கள்.

மதிப்பிற்குற்குரியவர்களே.......

சமூகம்,குடும்பம் கூட்டமைப்பு என்பது குறித்து 
ஒரு உவமையோடு சில விளக்கம் தருகிறேன்.
விரும்பினால் உள்வாங்கிகொள்ளுங்கள்,
இல்லையெனில் தவிர்த்து விடுங்கள்.

எல்லா வளமும் நிறைந்த அற்புதமான ஒரு தோட்டத்தில் 
சுற்றி மதில்களும் அதன் மேலே முல்வேலியும் அமைக்கப்பட்டு 
அதற்கு நேர்த்தியான வாசல் கேட்டும் அமைக்கப்பட்ட 
ஒரு அழகான தோட்டத்தில் 
எல்லாவகையான மரங்களும்,செடிகளும்,என அதில் நிறைத்து 
அதன் வளர்ச்சிக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து 
அதன் உள்ளே மிக உறுதியான அஸ்திவாரத்துடன் 
மிக நேர்த்தியான கட்டப்பட்ட வீடு என 
எல்லாம் பார்த்து பார்த்து அமைக்கப்பட்ட 
அந்த தோட்டமும் வீடும் எப்படி இருக்கும்.
அதில் நம்மை வசிப்பதற்கு இலவசமாக தந்து 
அதை நமக்கே உரிமையாக்கினால் எவ்வளவு சந்தோசம் அடைவோம்.



நான் மேலே குறிப்பிட்ட இந்த தோட்டமும் வீடும் 
மரங்களும் செடிகளும் முள்வேலிகள் அமைக்கப்பட்ட மதில்சுவர்களும் 
கடந்த ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னே 
சர்வசக்திமிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட 
தூதர் முஹம்மது சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மூலம் 
அவர்களில் தோழர்களின் உழைப்பால் இன்னும் 
எப்போவெல்லாம் தேவையோ அப்போவெல்லாம் பூமிக்கு அனுப்பி  
மலக்குகளின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டது. 

அதற்கு அந்த தோட்டத்திற்கு பெயர் இஸ்லாம்,
அதில் வசிப்பவர்கள் முஸ்லீம்கள்.

சரி இதில் என்ன படிப்பினை என்கிறீர்களா சொல்கிறேன்,

அதற்கு முன் உங்களின் கற்பனைக்கு ஒன்று.
உங்களின் பகுதியில் அல்லது நீங்கள் அறிந்த,படித்த 
நான் மேலே குறிப்பிட்ட இத்தகைய வீட்டை 
கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நானும் எனது ஊரில் இருந்த 
மூன்று வீடுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒன்று கருப்பட்டி வீடு,
இரண்டு தொன்னூத்தி ஒன்பது ஸாலிஹ் அப்பா வீடு,
மூன்று ஜொஹரா மஹால்.

கருப்பட்டி வீடு :-

வீட்டிற்கு செல்வதற்கான படிகளே முப்பதுக்கும் அதிகம் இருக்கும்.
மிக உயரமான கோட்டை மாதிரி அமைப்பில் கட்டப்பட்ட வீடு.
வீட்டின் உரிமையாளரின் வாரிசுக்கு ஏற்பட்ட கால சூழ்ச்சி 
அவரின் மரண தண்டனை வரை சென்றது.
அதற்குள் செல்லவில்லை ஆனால் 
தற்போது அப்படி ஒரு வீடு இருந்தது என்று சொன்னால் 
யாரும் நம்ம மாட்டார்கள்.

ஜொஹரா மஹால் :-

மேலுள்ள கருப்பட்டி வீட்டின் அமைப்பில் ஒத்து இருக்கும் மற்றொரு வீடு.
அதே போல படிகள் அதைவிட உயரமான கம்பீரமான வீடு.
வீட்டின் உரிமையாளர் தனது வாரிசுக்கு தேவைக்குரிய 
வெளிவுலக பழக்கமும்,படிப்பறிவும் தராததால் 
ஒரு அடையாள சின்னமாகவே தற்போதும் இருக்கிறது ஜொஹரா மஹால்.
அதன் மூன்றாவது தலைமுறை தோழன் தனது சிறு முயற்சியால் 
ஜொஹரா மஹாலை சற்று புணரமைப்பு செய்துவருவது 
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வு.

தொன்னூத்தி ஒன்பது ஸாலிஹ் அப்பா வீடு:-

நான் ஆரம்பத்தில் கூறியுள்ள எல்லா அமைப்பையும் கொண்ட 
அற்புதமான தோட்டமும் சுற்றி வேலிகளும் 
அதற்குள்ளே மரங்களும் செடிகளும் சூழ்ந்த நடுவே 
ஒரு மிக கச்சிதமான வீடும் என வருவோரை 
சற்று ஆசுவாசப்படுத்திகொள்ளும் அளவிற்கு நேர்த்தியான தோட்டம்.
அந்திநேரத்தில் எல்லா பறவைகளும் அடைக்கலம் ஆகும் பூங்காவனம் அது.
ஸாலிஹ் அப்பா இறந்து விட்டார்.அவரின் மகள் கூத்தாநல்லூரில் 
திருமணம் முடிக்கப்பட்டு அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
தற்போது தோட்டத்தில் மரங்கள் இல்லை,செடிகள் இல்லை,
வீடும் இல்லை,சுற்றி வேலியும் இல்லை,பொட்டல் திடலாக ஆகி விட்டது.
அதை வாங்கி வேறொருவர் மனைப்பிரிவு போட்டு விற்றுவிட்டார்.

எல்லாம் முடிந்தது.

ஆனால் கதை இன்னும் முடியவில்லை.
தொடர்வேன் மீண்டும் பிறகு இன்ஷா அல்லாஹ்.

என்ன புரிந்தீர்கள்.?
தற்போது கருத்திடுங்கள்.

அன்புடன் 
அ.மு.அன்வர் சதாத்

குறிப்பு : -
மேலுள்ள குறிப்பு இறைவன் எனக்கு தந்த அறிவின் மூலம் உதித்தது
இதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை.
விரும்புவோர் இதை அவர்களின் பெயரோடு பிரசுரிக்கலாம்
எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக