புதன், 26 செப்டம்பர், 2012

ஏன்? ஏன்? ஏன்?

எந்த ஒரு மனிதனும்
தனது அறிவு வளர்ச்சிக்கும்
அதை பட்டை தீட்டுவதற்கும்

ஏதாவது ஒரு உருவாக்க கருவியின்
துணை கொண்டு தான் உருவாகிறான்.

அப்படி உருவாகும் பெரும்பாலான
மனிதர்கள் தங்களது வளர்ப்பின்
வேர்களை எப்போதும் மறப்பதில்லை.

இதில் அதிக தாக்கம் கொண்டது
கொள்கை சார்ந்த உருவாக்கம்.

இதை தாண்டி

நாம் ஒரு மரணிக்கும் மனிதர்கள்,
நாம் சார்ந்த மார்க்கம் இஸ்லாம்,
எமது இறைவன் அல்லாஹ் எனும்

நிஜத்தை நோக்கிய பார்வைக்குரிய
அற்புத விஷயத்திற்கு வருவது என்பது
பெரும்பாலும் அதிகப்படியானவர்களுக்கு
வாய்ப்பதில்லை.

அதனால் தன்னை மூடி மறைக்க
பிறரை மிக இலகுவாக

எப்படி எமது மார்க்க மேடைகளில் சிலர்
தனக்கு விளங்காததை ஹராம்,காபிர் என்று சொல்லி
எம்மை திசைதிருப்பி விடுகிறாரோ அதுபோல

எம்மிடையே உள்ள பெரும்பாலனவர்கள்
தங்களுக்கு தெரியாததை அல்லது

தான் சார்ந்துள்ளவைகளுக்கு
எதிராவைகளை, எதிரானதாக
கருதுபுவைகளை எல்லாம்

மிக இலகுவாக தனிமைப்படுத்த
பயன்படுத்தும் சொற்கள்
ஏராளமாக இருக்கிறது.

எல்லாம் இடத்துக்கு இடம்
நேரத்திற்கு நேரம்
நபருக்கு நபர் மாறுபடும்
கொடியதன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக