சனி, 9 ஜூன், 2012

அன்பிற்குரிய தீன் மரைக்கார்,

அன்பிற்குரிய தீன் மரைக்கார்,

சமீபத்தில் தோராயமாக ஒரு கணக்கெடுத்தேன்.

அது நாகை மாவட்டத்தில் நூறு முஸ்லீம் கிராமங்கள் உள்ளது.
அதில் மாதம் இரண்டு திருமணம் என்று வைத்து கொண்டால் 
இரு நூறு திருமணங்கள்.
ஒரு திருமணத்தில் உணவிற்காக மட்டும் சிலவு 
தோராயமாக ஒரு லட்சம் ரூபாய்.
எனில் இரு நூறுக்கும் இரண்டு கோடி ரூபாய்.

வருடம் இருபத்திநாலு கோடி ரூபாய் சிலவு.

இதை அப்படியே சுன்னத்தான முறையில் நடத்தி 
சிலவை குறைத்தால் வருடம் 
பதினைந்து கோடி மிச்சப்படுத்தலாம்.

அந்த பதினைந்து கோடியை கொண்டு 
அப்படியே ஒரு தொழில் தொடங்கினால் 
வருடம் முப்பது லாபமென வைத்துகொள்வோம் 
(பலர் மடங்குகளில் சம்பாதிக்கிறார்கள்)

இன்ஷா அல்லாஹ்.
ஐந்து வருடத்தில் நாகை மாவட்டத்தில் 
வறுமையை ஒழித்து 
அனைவருக்கும் வசதிகள் தந்து 
வெளிநாடுகளை எல்லாம் நிறுத்தி 
குடும்பத்துடன் சந்தோஷமாக 
வாழும் நிலையை கொண்டுவரலாம்.

மார்வாடிகளை பாருங்கள்,
குஜராத்திகளை பாருங்கள்,
போறா முஸ்லீம்களை பாருங்கள்.

அவர்கள் எல்லாம் பைத்துல்மால் வைத்து 
நிதி திரட்டி அவர்களின் சமூகத்தை 
எங்கோ உயர்த்தி விட்டார்கள்.

நாமோ நமக்குள் முடங்கி கிடக்கிறோம்.

இறைவேதம் இப்படி கூறுகிறது


13:11   لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ

13:11மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். 
அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; 
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், 
அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், 
அதைத்தடுப்பவர் எவருமில்லை - 
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத் 

3 கருத்துகள்:

  1. salam,
    நல்ல ஆலோசனைகளை வழங்கி உள்ளீர்கள்...சமுதாய மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வாகும்,அதற்கு இறைவனிடம் பிராத்திப்போம் ....

    புதிய வரவுகள்:
    மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
    www.tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. www.tvpmuslim.blogspot.com தளத்திற்கு வாருங்கள்,இணையுங்கள்,உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்.......

    பதிலளிநீக்கு
  3. ஆரோகியமான கருத்துக்களை அள்ளித்தெளித்திருக்கிறீர்கள். வருங்கால சமுதாயம் சீர்பட நல்ல யோசனைதான். ஆனால் அதிலும் ஊழல் இல்லாமல் இருக்கணுமே......

    பதிலளிநீக்கு