செவ்வாய், 5 ஜூன், 2012

மதிப்பிற்குரிய ஐடியல் ஸ்கூல் முதல்வர் அவர்களே,

மதிப்பிற்குரிய ஐடியல் ஸ்கூல் முதல்வர் அவர்களே,

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 
பிறந்த தினத்தில் நமது பள்ளியின் 
பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில் 
கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்

ஒரு குற்ற உணர்ச்சி கொண்டு இதை எழுதிகிறேன்.

நீங்கள் பேசும் போது பெற்றோர்களாகிய எம்மை நோக்கி 
கடந்த வருடம் பள்ளி மாணவர்களின் 
அழகான முன்னேற்றத்திற்கு காரணமான உங்களை 
உற்சாகப்படுத்தகூடிய ஒரு வார்த்தை கூட 
சொல்லவில்லை என ஆதங்கத்தோடு கூறினீர்கள்.

நிச்சயமாக துக்கம் அடைந்தேன்.
வெட்கம் கொள்கிறேன்.

மன்னித்து கொள்ளுங்கள்.

எங்களின் பிள்ளைகள் மிகவும் சிறப்புற 
வளர்ச்சி பெறுகிறார்கள் நமது ஐடியல் பள்ளியின் மூலம் 
என்பதை உணர்வு பூர்வமாக அறிவேன் நான்.

உங்களின் உழைப்பு 
அதில் உள்ள நேர்மை, அக்கறை கண்டு 
பல முறை ஆனந்தம் அடைந்திருக்கிறேன்.

எம் பிள்ளைகளின் கல்விக்கு சரியான இடம் 
நமது ஐடியல் பள்ளிதான் என்றும், 
அதின் சரியான மாலுமி நீங்கள்,

உங்களின் தீபம் மேலும் பிரகாசிக்க உங்களின் அரணாக 
ஷைக் அலாவுதீன் அண்ணன் மற்றும் 
சித்தீக் அண்ணன், சகோதரி பர்வின் என்பதை 
நான் என்றும் அறிவேன்.

மேற்குறிப்பிட்ட அதே வரிசையில் 
என்னையும் இணைத்துகொள்ளுங்கள்.

உங்களின் உண்மைக்கு, எம் பிள்ளைகளின் மேல் 
நீங்கள் கொண்ட அக்கறைக்கு, நேர்மைக்கு 
பெருமிதத்தோடு என் உள்ளம் நெகிழ 
நெஞ்சார வாழ்த்துகிறேன்.

தன் பிள்ளைகளைப்போல் அக்கறையோடு, 
பாசத்தோடும், பரிவோடும் பாடங்கள் நடத்திய 
எனது மகன் முஹம்மது பர்ஹானின் வகுப்பாசிரியர் 
உயர்திரு ஜீனத் அனீஸ் அவர்கள்,

எனது மகள் ரைஹானா வகுப்பாசிரியர் 
உயர்திரு வள்ளிதேவி அவர்கள்,

எனது தம்பி மகள் ஆதிகாவின் வகுப்பாசிரியர் 
உயர்திரு ஜெயந்தி அவர்களையும் 

மற்றும் அனைத்து வகுப்பாசிரியர்கள்,
வாகன ஓட்டுனர்கள்,ஆயாக்கள்,வாயில் காப்பாளர் 
மற்றும் அனைத்து உழியர்களையும் 

பெருமிதத்தோடு உள்ளம் நெகிழ 
நெஞ்சார வாழ்த்துகிறேன்.

ஐடியல் ஸ்கூல் பல சிகரம் தொட 
எப்போதும் துணை இருப்பேன், 
புஜம் கொடுப்பேன் இன்ஷா அல்லாஹ்.

 அன்புடன் 
அ.மு.அன்வர் சதாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக