செவ்வாய், 29 மே, 2012

மதிப்பிற்குரிய எலந்தங்குடி எனதூர் ஜமாத்தார்களே,

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

மதிப்பிற்குரிய எலந்தங்குடி எனதூர் ஜமாத்தார்களே, 

வலைத்தளம் மூலம் மனம் திறந்த மடல் எழுதுவேன் என்று சொல்லி இருந்தேன்.
அதற்கான அவசியம் இன்னும் ஏற்படவில்லை என்று கருதிறேன்.
ஆனாலும் எனது ஆலோசனைகளை இந்த கடிதம் மூலம் அறிவிக்கிறேன்.

நமக்கு தெரிந்தும், நமது  முன்னோர்களிடம் கேட்டு அறிந்தவகையில் 
இதுவரை நமதூரில் ஒரு மருத்துவரோ,ஆட்சியரோ 
இன்னும் பல அறிய படிப்புகள்,பதவிகளில் 
இருந்தவர்கள் யாரும் இல்லை எனபதை நாம் அறியமுடிகிறது.

தொடர்ந்து நமக்கு நடக்கும் கருத்து மோதல்களிலேயே நான் கவனம் செலுத்தி, 
சயீது ரவுத்தர் காலத்தில் இருந்து இதுவரை, அதற்கு முன்பிருந்தும் கூட,
யார் ஜெயிப்பது, எப்படி அடுத்த நிர்வாகத்தில் நாம்வருவது, 
அல்லது நமக்கு ஆதரவாளர்கள் வரவைப்பது,
என்பதிலேயே நமது கவனத்தையும், ஆற்றலையும் செயல்படுத்துகிறோமே 

அல்லாது

நமது ஊரின் நலனுக்கு உகந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவதோ, 
நமது ஊர் மாணவர்களின் கல்வி விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்வது,
அவர்களின் செயல்களில் எப்படி மார்க்க விஷயங்களை கொண்டு 
பூர்த்தி செய்வது என்பதை குறித்தோ, 

பெண்களின் நிலை, அவர்களின் மார்க்க, உலகஅறிவு விஷயங்களை 
எப்படி மேன்மை படுத்துவது என்பனவற்றை பற்றியோ,

நம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன வழிகள் இருக்கிறது,
அதை எப்படி நம்மக்களுக்கு தெரிவிப்பது,
எப்படி அவைகளை செயல்படுத்துவது என்பவனவற்றில் 
நாம் கவனம் செலுத்துவதில்லை.

எனவே அன்பு கூர்ந்து மதிப்பிற்குரியவர்களே........

வரும் காலங்களில் இது போல நல்லவிஷயங்களில் நாம் கவனம் செலுத்தி 
நம் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்படுவோம் என்று 
இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

உங்களின் கருத்துகளை அறிய ஆவல் கொள்கிறேன்.

அல்லாஹ்வின் அருள் மறையை நினைவு கூறுவோம் 

16:112   وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; 
அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, 
அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் 
ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - 
ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; 
ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, 
அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்

மக்களின் முன்னேற்றத்தின் மீது தீராத அக்கறைகொண்ட 

அன்புடன் 
அ.மு.அன்வர் சதாத் 

1 கருத்து:

  1. வலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதேரே. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

    //யார் ஜெயிப்பது, எப்படி அடுத்த நிர்வாகத்தில் நாம்வருவது,
    அல்லது நமக்கு ஆதரவாளர்கள் வரவைப்பது,
    என்பதிலேயே நமது கவனத்தையும், ஆற்றலையும் செயல்படுத்துகிறோமே

    அல்லாது

    நமது ஊரின் நலனுக்கு உகந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவதோ,
    நமது ஊர் மாணவர்களின் கல்வி விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்வது,
    அவர்களின் செயல்களில் எப்படி மார்க்க விஷயங்களை கொண்டு
    பூர்த்தி செய்வது என்பதை குறித்தோ,

    பெண்களின் நிலை, அவர்களின் மார்க்க, உலகஅறிவு விஷயங்களை
    எப்படி மேன்மை படுத்துவது என்பனவற்றை பற்றியோ,

    நம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன வழிகள் இருக்கிறது,
    அதை எப்படி நம்மக்களுக்கு தெரிவிப்பது,
    எப்படி அவைகளை செயல்படுத்துவது என்பவனவற்றில்
    நாம் கவனம் செலுத்துவதில்லை.// உன்மை உன்மை உன்மை

    பதிலளிநீக்கு