திங்கள், 28 மே, 2012

மதிப்பிற்குரிய தோழர் வேங்கை.சு.செ.இப்ராஹீம் அவர்களே,

மதிப்பிற்குரிய தோழர்  வேங்கை.சு.செ.இப்ராஹீம்  அவர்களே,

உங்களின் 


பள்ளிவாசல் இடிப்பும்... ராஜபக்சேவின் கொழுப்பும்...


இந்த கட்டுரைகளை கண்டேன். 

மீண்டும் மீண்டும் அதன் உள் செல்வதைவிட 
இனி ஆக வேண்டியதை பாப்போம் என்பதன் எண்ணம் அறிகிறேன்.

உண்மை தான்.

தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களர்கள் மூன்றில் இரண்டு சமூகம் 
ஒன்றுபட்டால் என்ன விழைவுகள் ஏற்பட்டிருக்கும் அங்கே 
என்பதை நினைக்கும் அதே நேரத்தில்,

இலங்கைக்கு சுற்றி இந்தியா,மாலத்தீவு,பாகிஸ்தான்,
சீனா, வங்காளதேசம்,நேபாளம்,

இன்னும் சில நாடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் 
கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை 
அறியவேணும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மற்ற நாடுகளை பிறகு பார்க்கலாம்.

முதலில் இந்தியா நாட்டின் நிகழ்வை பார்ப்போம்

கழுதை தேய்ந்து கட்டெரும்பாய் ஆனது காங்கிரசு.
வெறும் சம்பவங்களின் வேகத்தில் மட்டுமே 
மாற்றாய் இருக்குமே அல்லாது 
நிரந்தரதீர்வாய் இருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மாநில கட்சிகளெல்லாம் எப்போதுமே 
ஒரே முகாமில் இருப்பதில்லை 
எனவே அவைகளை சக்திகளாக கருதமுடியவில்லை.

இது அல்லாமல்  சில சக்திகள் இருக்கிறது 
அவைகள் அதிகாரத்திற்கு வர நாள் பிடிக்கும்.

ஹிந்துத்துவ சக்திகள் :-

தங்களின் எல்லா வேலைகளையும் திட்டமிட்டே 
நூற்றாண்டுக்கு பயன்தரும் வகையில் பயணிக்கிறது.

எனக்கு தெரிந்து இந்தியாவில் இதை தான் 
அழிவு சக்தியாக பார்க்கிறேன்.

சரி இப்படியான சூழலில் இலங்கையில் தமிழர்களின்,
முஸ்லீம்களின் கை ஓங்கிவிடுமானால் 
அதன் தாக்கம் இங்கு தமிழகத்திலும் இருக்கும்.

காரணம் இல்லாமல் இல்லை.

கேரளா எனும் மாநிலத்தில் நாசர் மதானி எனும் மனிதர் 
தலித் முஸ்லீம்களை ஒருங்கினைத்ததையே 
தாங்கிக்கொள்ளமுடியாத பாசிசம் எப்படி 

இலங்கை எனும் ஒரு நாட்டில் 
தமிழனும் முஸ்லீம்களும் ஒருங்கிணைவதை 
எப்படி ஏற்றுக்கொள்ளும்.

அப்படி ஒருங்கிணைந்து விட்டால் 
அதன் தாக்கம் தமிழகத்தில் வரும்,
பிறகு கேரளாவில் வரும்,
பிறகு திராவிட எல்லைகளில்  வரும்.

அப்படி ஒரு நிலை வந்தால்  
பாசிசம் பாரிய தோல்வி அடைந்து விடும்  என்பது 
அதன் அறிவுஜீவிகளுக்கு தெளிவாக தெரியும்.

எனவே தான் வேரிலேயே விஷம் வைத்தார்கள்.

எதிரிக்கு எதிரி நண்பன் எனும் அடிப்படையில் 
ராமனின் ஆட்கள் ராவணனின் ஆட்களுக்கு உதவிசெய்தார்கள்.

முதலில் முஸ்லீம்களையும் புலிகளையும் பிரித்தார்கள்.
பிறகு புலிகளை சாதியம் எனும் கொடிய அரக்கன் மூலம் பிரித்தார்கள்.
பிரிந்த என் சமூகம் தோல்விகண்டது.

முதல் நிலை முடிந்ததும் தற்போது அடுத்தநிலை எடுத்திருக்கிறார்கள்.
அதுதான் இலங்கையில் முஸ்லீம்களை ஒழிப்பது. 

புலிகளை தோல்வியுரசெய்யும் போது இங்குள்ள பாசிசம் 
நேரிடையாக,வெளிப்படையாக ராவனப்படையுடன் நிற்கவில்லை,

அப்படி நின்றால் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்திருக்கும்.
அந்த மாற்றம் இந்திய அளவில் பாசிஸ்டுகளை இல்லாமல் ஆக்கி இருக்கும்.

ராமனின் ஆட்கள் என்ன நம்மை போல வயிறு புடைக்க பிரியாணி திண்டு விட்டு, 
திண்ட சோறு செறிக்க அனைவரையும் விமர்சித்துவிட்டு தூங்க செல்வதற்கு.

அவர்கள் புத்திசாலிகள் வளைக்கும் முன் கல் எரியாதவர்கள்.
முதல் வேலை முடிவுற வலை விரித்து காத்திருந்தனர்.

அய்யகோ 

என் சகோதரர்கள் எல்லாம் சிக்கிக்கொண்டனர்.
எல்லாம் முடிந்தது.
 
தனது அடுத்தவேளைக்கு அவர்கள் மறைமுகமாக நிற்கவேண்டியதில்லை.
காரணம் தற்போது அழிக்கப்பட வேண்டியவர்கள் முஸ்லீம்கள்.
இந்தியாவிலும் பாசிஸ்டுகளின் எதிரி அவர்களே. 

இவர்களையும் சில ஆண்டுகளில் வெற்றிகொண்டுவிட்டால் 
பிறகு ராவணைன் ஆட்களை கொண்டு அங்கே ராமனின் ராஜ்ஜியம் நடத்திவிடலாம்.

என்னே ஒரு அற்புததிட்டம்.

என் தோழரே....

இங்குதான் நாம் விழித்திருக்கவேண்டும் 

எவர்கள் ஒருங்கிணைய கூடாது என பாசிசம் இலங்கையில் வேலைபார்த்ததோ,
அவர்களை அந்த சமூகத்தை தமிழகத்தில் ஒருங்கிணைக்கவேண்டும்.

அவர்களுக்கு வரலாறு சொல்லித்தரவேண்டும்.
எதிரிகள் யார்,நண்பர்கள் யார் என்று விளங்க வைக்கவேண்டும்.

கலைஞரை உணர வேண்டும்,திருமாவை உணர வேண்டும்.
தெஹ்லானை உணரவேண்டும்,ஜவாஹிருல்லாவை உணரவேண்டும்.
இவர்களை ஒரே தளத்தில் கொண்டுவரவேண்டும்.

அப்படி ஒரு நிலை வந்தால் தான்,
 நாம் இலங்கையில் செய்த தவறில் இருந்து பாடம் படித்து
மீண்டும் அந்த தவறை செய்யாது உள்ளவர்கள் ஆவோம்.

வரலாறு நம்மை நிந்திக்காது.
தமிழ் சமூகம் வெல்லும்.
திராவிடம் வெல்லும்.

பெரியாரின்,அண்ணாவின்,
காயிதே மில்லத்,பழனிபாபாவின் 
கனவு நிஜமாகும் .

ஆயிரம் மைல்கள் கடப்பதற்கு எண்ணினாலும் கூட 
முதலில் எத்திசைக்கு பயணிக்க எண்ணுகிறோமோ 
அத்திசையில் ஒரு அடி எடுத்து வைக்கவேண்டும்.

என்றும் எம் மக்களின் முன்னேற்றத்தில் 
தீராத காதல் கொண்டு

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத் 

4 கருத்துகள்:

  1. தொலைநோக்கு சிந்தனைகளை தொகுத்து தந்திருக்கும் கட்டுரை. வாழ்த்துக்கள்.
    எதிரிகள் யாரென்று உணர மறுக்கும் அதே நேரத்தில் - புதிய எதிரிகளையும் உருவாக்கி வருகிறோம். தோழமை சக்திகளுடன் நம்மை இணையவிடாமல் த(கெ)டுக்கும் பாசிச சக்திகளுக்கு தோதாக - சில முஸ்லிம் அமைப்புக்கள் நம்மவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பது கவலை தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. சலாம் சகோ.அன்வர் சதாத்,
    ஓரடி அல்ல; ஈரடி எடுத்து வைத்துள்ளீர்கள்..!
    தொடருங்கள் தங்கள் பணியை தொய்வின்றி..!

    பதிலளிநீக்கு
  3. உங்களின் சிந்தனை வரவேற்க வேண்டும். ஆனால் தனி மனித சக்தியால் இந்த விஷத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது கஷ்டம் .(சில நாட்கள் ஆகும்) . ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் சொல்லுங்கள் அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் ..

    பதிலளிநீக்கு
  4. உங்களின் சிந்தனை வரவேற்க வேண்டும். ஆனால் தனி மனித சக்தியால் இந்த விஷத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது கஷ்டம் .(சில நாட்கள் ஆகும்) . ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் சொல்லுங்கள் அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் ..

    பதிலளிநீக்கு