செவ்வாய், 17 ஏப்ரல், 2012

என் சிறு வயது நீடூர்-நெய்வாசல்

என் சிறு வயது நீடூர்-நெய்வாசல்
என் மனதை எப்போதும் ஆக்கிரமிக்கும்.


அதில் மறக்கமுடியாதது……..


நோன்பு முப்பது நாளும் இரவு முழுவதும்
நடக்கும் விளையாட்டு போட்டிகள்,


நோன்பு திறப்பதற்கு மொத்த ஊரும்
பள்ளிக்கு வரும் நிகழ்வு,

மர்ஹூம் சம்சுல்ஹுதா ஹஜரத்தின்
வழிகாட்டல் பயான்,

பி எம் ஜியாவுதீன் ஹஜரத்தின் பஜர் தொழுகை
பயான் மற்றும் ஜும்மா கிராஅத்,

மதரசா ஆண்டு விழா (ஜல்சா),

ரபியுல் அவ்வல் பனிரெண்டு நாள் பயான்,

ஊரே கூடி நடத்தும் பெருநாள் 

விளையாட்டு போட்டிகள்


(ஒரு நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தெரு அண்ணன் 
மகாராஜாவாக போட்ட வேடம் 
இன்றும் மறக்கமுடியவில்லை),

நூற்றாண்டை கடந்த பழைய ஜும்மா பள்ளிவாசல் 

பள்ளிவாசல் குளம்,

எல்லோரிடத்திலும் இருந்த
உண்மையான அன்பு,
உரிமையான பாசம்,
நெகிழ்ச்சியான கண்டிப்பு.
சக மக்களின் மீது அனைவரிடத்திலும்
இருந்த பொறுப்புணர்ச்சி அக்கறை,

இதை எழுதும் போது அழுகை வருகிறது.

யா அல்லாஹ் எங்களுக்கு வேண்டும்
மீண்டும் அந்த பழைய நீடூர் நெய்வாசல்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

1 கருத்து:

  1. நூற்றாண்டை கடந்த பழைய ஜும்மா பள்ளிவாசல் எனது பெரிய அண்ணன் ஸபீர் அண்ணன் அவர்கள் வெளி நாடு சுற்றுலா சென்றபோது சைகோனில் ஹாஜியார் பள்ளிவாசல் தெரு (கருத்த(வாப்)பா வீட்டு)பக்கிர் முகம்மது அண்ணன் அவர்கள் வற்புறுத்தலின் பேரில் பழைய ஜும்மா பள்ளிவாசல் விஸ்தரிப்பு (இரு பக்கமும் இருந்த ஒட்டு வாரிக்கு பதிலாக தளம் அமைத்து சரி செய்ய வசூல் செய்து அனுப்பி அதன்படி புதிப்பிக்கப் பட்டது.


    பக்கிர் முகம்மது அண்ணன் சைகோனை விட்டு திரும்பிய பின் ஊரில் எனது வீட்டு பக்கத்தில் உள்ள எனது இடத்தில மளிகை கடை வைத்திருந்தார்கள் . அவர்கள் உடல் நலம் குன்றியபோது அடிக்கடி அவர்களை வீட்டில் சென்று பார்த்து வருவேன். அவர் மகளை எலதங்குடியில் திருமணம் கொடுத்துள்ளதை நான் அறிவேன்

    பதிலளிநீக்கு