வெள்ளி, 29 அக்டோபர், 2010

எங்கே நான் ?

அமைதியாய் இருந்தேன்
அர்த்தமற்றவன் என்றார்கள்
கொள்கை பேசினேன்
கொள்ளைக்காரன் என்றார்கள்
திரவியம் தேடினேன்
திமிர்பிடித்தவன் என்றார்கள்
கட்டுக்கடங்காமல் இருந்தால்
கடமைதவராதவன் என்கிறார்கள்
குழைந்து பேசினால்
குழந்தை மனசு என்கிறார்கள்
எங்கே நான் ?

6 கருத்துகள்:

  1. No age to Wish you Anwar anna........, most welcome to further future.......

    nice staring and only experience person can think deeply. we can see your experience by your lines

    பதிலளிநீக்கு
  2. எங்கே நான் ? ...வலைதளத்திற்கு தலைப்பாக வைத்து உங்களை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்...நீங்கள் எங்கே என்பதை உங்களிடம் கேளுங்கள்...பதில் கிடைக்கும்...தேடலுக்கு விடைகிடைக்கும் ....புதிய வலைதளத்திற்கு நல்வாழ்த்துக்கள்...

    உங்கள் சிந்தனைகளை ஆக்கங்களை பதிவுசெய்யுங்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்....!

    பதிலளிநீக்கு
  3. அண்ணனுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி. புது உற்சாகம் கிடைத்தது.
    நான் தேடுவது என்னை மட்டும் அல்ல கார்டோவாவை உருவாக்கிய என் சமூகத்தையும்....

    பதிலளிநீக்கு
  4. சகோதரர் அம்ஜத் வருகைக்கு நன்றி.
    இந்த மாமனிதர்களுக்கு மத்தியில் தொலைந்துபோனவன் நான்.
    என்னைதேடுகிறேன்

    பதிலளிநீக்கு
  5. எங்கே நான் /......
    இன்னுமா புரியவில்லை என்னை போல்
    பலர் நெஞ்சங்களில் அண்ணா ....

    பதிலளிநீக்கு
  6. Nice to see your blog...keep updating anna.. u search we ll learn from that search...

    பதிலளிநீக்கு