ஞாயிறு, 20 மே, 2012

சகோதரன் வன்னி அரசு அவர்களே,

சகோதரன் வன்னி அரசு அவர்களே,

என்னுள் இருக்கும் ஆதங்கத்தை அப்படியே 
தாங்கள் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

எவ்வளவு அருமையான ஒரு புரட்சி 
சாதியம் எனும் சாத்தானின் கொடுங்கரங்களில்
சிக்கி சிதறுண்டது பெரும் கொடுமை.

......................."2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
விடுதலைப் புலிகள் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’
மாநாட்டில் பேசிய எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்,
"தமிழீழ விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின்
போராட்ட வெற்றிக்குப் பின் கிடைக்கும் தமிழீழத்தில்
சாதி ஒழிக்கப்பட வேண்டும்.
சாதியற்ற தமிழ்த்தேசம் அமைய வேண்டும்" என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
கவிஞர் புதுவை ரத்தினதுரை,
"தம்பி பிரபாகரன் தலைமையில் நடைபெறும்
போராட்டத்தின் ஊடாகவே சாதியை ஒழித்து வருகிறோம்.
சாதி ஒழிக்கப்பட்ட தமிழீழம்தான் எமக்குத் தேவை.
சாதி அமைப்புடன் கூடிய தேசம் எங்களுக்குக் கிடைத்தால்,
அப்படியொரு தேசமே எமக்குத் தேவையில்லை"
என்று பேசினார்.".............................

சகோதரன் வன்னி அரசு அவர்களே,

மீண்டும் மீண்டும் படியுங்கள் இந்த வரிகளை
அப்பொழுதுதான் இதன் உள்ளர்த்தம் புரியும்.

விடுவார்களா சாதியத்தின் சூழ்ச்சி மூலம்
சாதிக்க நினைக்கும் சாத்தான்கள்.

அதனால் தான் யாசர் அரபாத்திடம் இருந்து திருப்பி
ஏரியல் சரோனிடம் நிறுத்தி தன்
முதல் இருப்பை நிறுத்தி கொண்டது பார்ப்பனீயம்.

முதல் சறுக்கல் முற்றிலும் சருக்களாகி போனதய்யா.
மோசம் போனோம்

தமிழ் தேசியம் என்பது வர்ணாசிரமத்திற்கு
நேர் எதிர் வரிசை கொண்டது.

எப்படி எனில் பறையனே இதன் உயர்குடி.

எப்படி சகித்து கொள்ளமுடியும் இந்த
வர்ணாசிரமத்திடம் பட்டம் பெற்ற பட்டதாரிகளால்.

வரும் காலங்களில்லாவது நாம் விளங்கி கொள்ளவேண்டும்.

தொல் திருமாவை முன்னிறுத்துங்கள்.

ஆதி திராவிடர்களை,முஸ்லீம்களை ஒருங்கிணையுங்கள்.
அதன் மூலம் தமிழ் தேசியம் வலுப்படுத்துவோம்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்



http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18150%3A2012-01-26-07-19-18&catid=1%3Aarticles&Itemid=264

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக