வியாழன், 14 ஜூலை, 2011

நடத்தை கெட்டவள்

ஏழை குடும்பத்து அழகிய பெண் நான்
வறுமையின் காரணமாக
விற்றுவிட்டார் என் பெற்றோர்
வசதிபடைத்த மணமகனுக்கு......

எனக்கோ பதினைந்து
அவனுக்கோ நாற்பது.....

வேகமாய் பெற்றேன் என் மகளை
ஆனாலும் ஏற்கவில்லை
என் மனம் அவனை......

விலகிநின்றேன்....
விசனப்பட்டேன்....
ஊர்கூட்டினேன்....
எல்லாம் சரியாகபோகும்
என  முடிவுசொன்னார் ஊர் பெரியவர்......

உதவி செய்ய வோடிவந்தனர்
சிலர்
ஓஸைஇல்லாமல்
ஒன்றை கேட்டனர்.....

எதுவும் நடக்கவில்லை....

வென்றேடுத்தான் என் தாயை
விலை கொடுத்து அவன்....

முடிவு செய்தேன்
எனை மாய்க்க
தடுத்து  விட்டார்
தனிஒருவர்....

எனைகேட்டார்
ஏன்  இப்படி...
கூறினேன்
என் கதையை....

ஏற்கிறாயா எனக்கேட்டார்....
முறையுடன் ஏற்றுக்கொண்டேன்...
எனக்கு பெயரிட்டது சமூகம்

நடத்தை கெட்டவள்.....

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே இத்தனை நாட்கள் நீங்கள் ஒரு வலைப்பூ நடத்துவது எனக்கு தெரியாமல் போனது எனககே வியப்பாக உள்ளது .மாஷாஅல்லாஹ்.உங்கள் தொண்டு வளர வாழ்த்துகின்றேன்.தொடர்பவகள் (Followers) தொடர வழி செய்யுங்கள்.
    அல்ஹம்துலில்லாஹ்!
    The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
    Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

    ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.

    பதிலளிநீக்கு