வெள்ளி, 10 டிசம்பர், 2010

என்னை மிகவும் கவர்ந்த விமர்சன கட்டுரை.


"எமது இந்தியாவின் எதிர்கால இலட்சியங்கள் எல்லாமே எமக்கு மகிழ்ச்சி ஊட்டும் விதமாகத்தான் இருக்கிறது. இருக்காதா பின்னே...நான் இந்தியன் என்று உரக்க உலகுக்கு சொல்வதற்கு, என்னால் ஆன உதவியை எம் இந்தியாவின் இலட்சியத்திற்காக செய்ய என்னை எமது இந்தியாவின் லட்சியம் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெருமைகள் வாய்க்க பெற்ற நாடு எம்நாடு. பல நூற்றாண்டு காலங்கள் எழுதிக்கொண்டே,பேசிக்கொண்டே இருக்கலாம் எம்நாட்டின் பெருமையை. 
                             சமீபத்தில் ஒரு மாத இதழில் அருந்ததி ராய் என்ற ஒரு தீவிரவாதியின் எழுத்துக்களை படிக்கும் பேறு கொண்டேன். " காஷ்மீரில் 68000 பேரை கொன்ற நாடு எப்படி ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியும்? குஜராத்தில் 2500 ( ? ) பேரை இனப்படுகொலை செய்த நாடு எப்படி ஒரு மதசார்பற்ற நாடக இருக்க முடியும்? " என்று எமது இந்தியாவின் இறையாண்மையையே கேலிக்குரியதாக ( கேள்விக்குரியதாக ) மாற்ற பாடுபடும் இந்த தீவிரவாதியை எம் தேசம் பெற்றிருந்தாலும்,எம்தேசம் ஆங்கிலேயனால் அடிமைப்பட்டு கிடந்த போதுஅடக்குமுறையை கண்டு அஞ்சாமல் ஆங்கிலேயனை எதிர்த்த எம்தேச தீவிரவாதிகளையும், அவர்கள் இருக்கும் இடங்களையும் ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தி ( ? ) வைத்த எம் மேண்மைமிகு தேச பக்தர் திரு குருஜி வீர் சாவர்க்கர் போன்றவர்களையும் வரப்பிரசாதமாய் பெற்றது தானே எம்நாடு. இருக்காதா பின்னே தேச பக்தரின் தேச பக்தியை பறைசாற்றுவதற்காக தானே எம் நாட்டின் இறையாண்மையின் கருவறையாய் ( ? ) இருக்கின்ற பாராளுமன்றத்திலேயே படம் திறந்து ஆற்றிய பங்குகளையும் சொல்கின்றனர் எம் நாட்டின் இந்நாள் தேச பக்தர்கள். 
                               இது போன்ற தகுதிகளை தன்னகத்தே கொண்ட பல தேச பக்தர்களை உள்ளடக்கியது எம்நாடு. உலகிலேயே எந்த மனிதர்களும் தீண்ட முடியாத இடமாய் இருக்கும் கருவறையிலேயே தீண்டியது மட்டுமல்லாமல் நோண்டியும் எடுத்த எம் பெருமை மிகு சேவகர்களை கொண்ட தலைவரை எந்த குற்றமும் அறியாதவர் என்றும்,எந்த குற்றத்திற்கும் துணை போக வில்லை என்றும் நடுநிலையான தீர்ப்பு வழங்குமாறு அறிவுரை செய்த  விசாரணைக்குழுவில் எத்தனை எத்தனை எம்தேசத்தின் பக்தர்கள்.
                             எம் தேசத்தின் தேவையற்ற சுமைகளாய் இருக்கும் மனிதர்களை ( ஒரு சமயம் இவர்களும் தேசதுரோகிகளோ என்னவோ )....., அடித்து துரத்திய ஆங்கிலேயனை கொண்டு, அழித்து கொன்று, அரவணைத்து அழகாய் அனுப்பிய தேச பக்தர்களும் எம் நாட்டில் உண்டு. இந்த தேசிய பக்தி செயலை பல ஆண்டுகளுக்கு பிறகு பண்பட்ட அறிவுடன் பரிந்து முடிவுரை எழுதிய அண்ணல் அம்பேத்கர் உருவாக்கியதில் மேதைகளாகவும் அரசர்களாகவும் உள்ள தேச பக்தர்களையும் எம்நாடு கொண்டுள்ளது. 
                            மனைவியின் சுகத்தை பெற்று,பிள்ளைகளின் அன்பைப் பெற்று வாழும் தேச துரோகிகளுக்கு மத்தியில், எம்நாடே மனைவி, எம்நாட்டின் மக்களே எம் பிள்ளைகள், என்று  எந்நேரமும் என்நாட்டுக்காக உழைத்துக்கொண்டு இன்னும் அதிகமாய் அழிப்பதற்காக...........மன்னிக்கவும், உழைப்பதற்காக பிரதமர் ஆக வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருக்கும் மக்கள் தொண்டர் திருஜி லால் கிருஷ்ண அத்வானி போன்ற தேச பக்தர்கள்.
                               மண்ணின் மைந்தர்கள் என்று சொல்பவர்களுக்கு விண்ணில் தான் இடமுண்டு என்று மிருதுவான முறையில் மண்ணுக்குள் புதைத்து விண்ணுக்கு அனுப்பியும், மற்றவர்களின் தாயகத்தை தான் தாயகமாய் மாற்றிய உலக பக்தர்கள் இஸ்ரேலியர்களை போன்று தான் நாமும் செய்ய வேண்டும் என்று மிக சிறந்த உதாரணத்தை ரத்தங்களுக்கு சொல்லும் எம் தேசபக்த தலைவர்கள்.
                              உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொகுசாகநடைதெருவில் சுற்றி திரிந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில்,உண்ணுவதற்கு உலகிலேயே தலைசிறந்த உணவு,உடுப்பதற்கு மிக அழகான உடுப்பு இருந்தும் எளிமையாய் என்றுமே தோன்றும் திரு பால் தாக்கரே போன்ற தேச பக்தர்கள்.
                            தம் தாய் மண்ணிற்காக போராடுகிறோம் என்றதவறான கொள்கையுடன் போராடும் தீவிரவாதிகளுக்கு  மத்தியில், தம் தேசத்திற்காக கற்பழிக்கிறோம், தம் தேசத்திற்காக ஊனப்படுதுகிறோம்,தம் தேசத்திற்காக கொலை செய்கிறோம் என்று எம்மக்களுக்காக போராடும் எம் ராணுவ தேச பக்தர்கள்.
                           தேவை இல்லாத சுமைகளை எம்நாட்டின் மடியில் இருந்து தூள் தூளாக சிதறடித்து அகற்றிய தேச பக்தை செல்வி பிரக்யா சிங் போன்றவர்களை சுட்டிக்காட்டிய தேச துரோகி ஹேமந்த் கர்கரேயை எம் பரிசுத்த தேசத்திலிருந்து அகற்றி தன்னைக்கூட விளம்பரப் படுத்திக் கொள்ளாத எம் தேச பக்தர்கள்.
                          அடுத்த நாட்டைக் காட்டிகொடுத்து தன் நாட்டில்வெகுமதி பெற்றும் அடுத்த நாட்டையே தன் நாடகக் கருதி சகல சௌபாக்கியங்களுடன் எம்நாட்டில் வாழும் திரு சுப்ரமணிய சுவாமி போன்ற தேச பக்தர்கள்.
                            தன் நாட்டிற்கு அற்பனிப்பதர்க்காக தனது உழைப்பான தனது சொத்தை பிரிக்கும் போது கொலையுண்ட திரு பிரமோத் மகாஜன் போன்ற தேச பக்த ஆத்மாக்கள்.
                             எங்கு தடை செய்யப்பட்டாலும் எம் நாட்டின் வாசற்கதவை திறந்து பன்னாட்டு கம்பெனிகளின் பரிசோதனைக் கூடமாய் எம் நாட்டை மாற்றிய வெள்ளை உடுப்பு தேச பக்தர்கள்.
                           அதிக அதிகமாய் குளு குளு மலையிலே கொஞ்சும் மேகங்களுக்கு  இடையில் எம்தேச மக்களின் நலனுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் ரத்தத்தின் ரத்தக்களாய் இருக்கும் தேச பக்தைகள்.
                          எம் நாட்டின் கடனை அடைத்து எம்நாட்டு மக்கள் நிமிர்ந்த தலையுடனும்,நேரான பார்வையுடனும் உலக அளவில் மதிப்பு மிக்கவர்களாய் இருக்க எமக்காகவும்,எம் தேச மக்களுக்காவும் தன் சொந்த உழைப்பில் ஈட்டியதை சுவிஸ் வங்கியில் சேமிக்கும் எம் அரசியல் தேச பக்தர்கள்,
                            இதைபோன்று பலதரமான தரமான வாழ்ந்த தேச பக்தர்களையும்,வாழ்ந்துக்கொண்டிருக்கிற தேச பக்தர்களையும் ,முன்மாதிரியாக கொண்டு இன்னும் சம இடங்களில் இதே போல மிக உயர்ந்த குணமுள்ள தேச பக்தர்களை பார்த்துக்கொண்டே எம் நாட்டின் லட்சியத்தை அடைய கனவு காண்கிறேன் நான்..........2020 - ல் எம்நாடு இது போன்ற தேசபக்தர்களை உள்ளடக்கிய வல்லரசாக......?

                 மறந்தே போய் விட்டேன் நான் இந்த கட்டுரைக்கு தலைப்பிடுவதற்க்கு,அதனால் தான் கடைசியில் தலைப்பிடுகிறேன்......
வல்லூறுகளின் வல்லரசு..........( எம்நாடு 2020 - ல் )

அணையும் நேரத்தை 
அன்புடன் அழைக்கும் ...இனா ஆனா 
அன்வர்தம்பி  
http://www.itzriz.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக