ஞாயிறு, 21 நவம்பர், 2010

செதுக்கப்பட்ட "மொட்டையாய் என் சமூகம் முட்டிக்கொண்டு மேதைகள்"

அன்பர்களே 10 -11 -10 அன்று "மொட்டையாய் என் சமூகம் முட்டிக்கொண்டு மேதைகள்" எனும் தலைப்பில் வந்த முனகலில் எனது மதிப்பிற்குரிய சிற்பிகள் செதுக்கியது என் மூலம் மீண்டும்....

மூலையில்  முனகிக்கொண்டு
முடிவுசெய்ய முயற்சி செய்து
முடியாமல் முச்சந்தியில் மும்முரமாய்
முட்டிக்கொள்ளும் மேதைகள்.....
தொப்புள் கொடி ரத்தம் இழந்து...
நோய் எதிர்ப்பு சக்தி இழந்து...
தவறான கற்பிதம் மூலம்
கல்லாமை ஆகி...
வேலை இழந்து...
வறுமை அடைந்து...
பசியாய்...
கோபம் கொண்டு
தெரிந்த மொழிகளில்
பதில் தரும் போது
கள்வன் என கொலை செய்து...
கண்டிக்கும் போது கற்பிழந்து...
கண்ணியம் காக்கும் வீடிழந்து...
என எல்லாம் இழந்து
மொட்டையாய் என் சமூகம்.....
முட்டிக்கொண்டு மேதைகள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக