வியாழன், 11 நவம்பர், 2010

மொட்டையாய் என் சமூகம் முட்டிக்கொண்டு மேதைகள்

தீனை நிலை நாட்ட
இறை அழைப்பே சரி...
இல்லை
இறைவழி போரே சரி...
இல்லை
இறைவணக்கமே சரி...
இல்லை
தலை மறைத்தே சரி...
இல்லை
குதிகால் பார்த்தே வரிசை சரி...
இல்லை
கால் விரல் பார்த்தே சரி...
இல்லை
சப்தமாக எற்றுகொள் என சொல்லுவதே சரி...
இல்லை
சுன்னிகளே சரி...
இல்லை
சலபிகளே சரி...
நானே சரி...
என
முட்டிக்கொள்ளும் மேதைகள்.....
தொப்புள் கொடி ரத்தம் இழந்து...
நோய் எதிர்ப்பு சக்தி இழந்து...
தவறான கற்பிதம் மூலம்
கல்லாமை ஆகி...
வேலை இழந்து...
வறுமை அடைந்து...
பசியாய்...
கோபம் கொண்டு
தெரிந்த மொழிகளில்
பதில் தரும் போது
கள்வன் என கொலை செய்து...
கண்டிக்கும் போது கற்பிழந்து...
கண்ணியம் காக்கும் வீடிழந்து...
என எல்லாம் இழந்து
மொட்டையாய் என் சமூகம்.....
முட்டிக்கொண்டு மேதைகள்.....

2 கருத்துகள்:

  1. நண்பர் சபீக்,
    உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
    நன்றி
    அன்புடன்
    அ.மு.அன்வர் சதாத்

    பதிலளிநீக்கு